குழந்தை யாருக்கு பிறந்தது...கொடுமைப்படுத்திய தந்தை - கடைசியில்?
குழந்தை ஜாடை தந்தையை போல் இல்லை என்று கொடுமைப்படுத்தியவருக்கு கடசியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது.
கணவருக்கு சந்தேகம்
ரஷ்யாவை சேர்ந்தவர் வேலண்டினா. இவரது மகள் அல்யோன்யா ரோமான்வா(39). இவர் பிறந்தபோது, அப்பா ஜாடையில் இல்லையென உடனே வேலண்டினா மீது கணவருக்கு சந்தேகம் திரும்பி உள்ளது. வளர்ந்த பிறகு சரியாகிவிடும் என்று வேலண்டினா கணவரை சமாதானம் செய்துள்ளார்.

ஆனால், அல்யோன்யா வளர வளர, அப்பா ஜாடை சுத்தமாக இல்லாமல் இருந்துள்ளது. பார்ப்பதற்கு ஒரு ஆசிய நாட்டை சேர்ந்தவர் போலவும் இருந்துள்ளார். மேலும், உள்ளூர்வாசிகளும், அல்யோன்யாவை பார்க்கும்போதெல்லாம் வித்தியாசமாக தெரிகிறாரே என்று கூறியுள்ளனர்.
அதிர்ச்சி சம்பவம்
இதற்கிடையில், தந்தை இவரையும், இவரது தாயையும் கொடுமைப் படுத்தி வந்துள்ளார். அதனையடுத்து, தன் பிறப்பு குறித்து அவர் நிறைய ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளார். கடந்த 1982 ல் ஒரு மருத்துவமனையில் அல்யோன்யா பிறந்துள்ளார்.
அதே மருத்துவமனையில் குல்சினியா என்ற பெண்ணும் பிறந்துள்ளார். இவர்கள் 2 பேரின் அடையாளத்தையும், அங்கிருந்த செவிலியர்கள், தவறாக குறிப்பிட்டுவிட்டார்களாம். அதனால், குழந்தைகளும் மாறி போய்விட்டன.
இந்த விஷயம் அறிந்து அல்யோன்யா அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துள்ளார். அதில், குழந்தை மாறி போனது உறுதியானது. 40 வருடங்கள் கழித்து இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.