உக்ரைன் மீது ரஷ்யா போர் - இந்தியாவில் விலை உயரும் பொருட்கள்

India RussiaWarUkraine IngredientsPriceHike
By Thahir Feb 24, 2022 06:16 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கிய நிலையில் இந்தியாவில் பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவ படைகளை குவித்து வந்தது.அங்கு ராணுவ பயிற்சி நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஆயுதங்களை குவித்ததற்கு ஐநா,நேட்டோ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரவித்தனர்.

நேற்றைய தினம் உக்ரைனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டார்.

இதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு பகுதியில் குண்டுகளை வீசி வருகிறது ரஷ்யா ராணுவம். இதற்கு அமெரிக்கா,ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் இந்தியாவில் பொருட்களின் விலை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல்,டீசல் விலை உயரும் அபாயம் ஏற்படும் என கூறப்படுகிறது.

மேலும் உணவுப்பொருளான கோதுமையின் விலையும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.