உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்புகிறது : புதின் திடீர் அறிவிப்பு

Vladimir Putin Ukraine
By Irumporai Dec 23, 2022 04:55 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் போர் முடிவுக்கு வர ரஷ்யா விரும்புவதாக அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரம் 

உக்ரைனில் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், சண்டை முடிந்தவரை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் புடின் கூறியதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் (SMH) தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்புகிறது : புதின் திடீர் அறிவிப்பு | Russia War In Ukraine Soon Putin

புதின் விளக்கம் 

எங்கள் இலக்கு இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம், தொடர்ந்து பாடுபடுவோம்,எனவே இவை அனைத்தும் முடிவடைவதை உறுதி செய்ய முயல்வோம், விரைவில் சிறப்பாக செயல்படுவோம்” என்று புடின் செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு விருந்தளித்த ஒரு நாள் கழித்து புடின் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.