உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா தீர்மானம் தோல்வி
உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் நாட்டில் உள்ள வான்வழி,கடல்வழி,மற்றும் தரைவழி உள்ளிட்டவற்றை தாக்கி வரும் ரஷ்யா நாட்டு படைகளால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டில் தொடர் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
உக்ரைன் தலைநகரான கீவ் நகரையும் ரஷ்யா படைகள் நெருங்கி தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தனர்.ஆனால் இதில் இந்தியா,சீனா,ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையிலும் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால் ஐ.நா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.
You May Like This