தொடரும் உக்ரைன் போர்...17 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்
உக்ரைன் போர் எதிரொலியால் சொந்த நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு இதுவரை 17 லட்சம் மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா.அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ந் தேதி போரை தொடங்கியது.இதனால் அந்நாட்டில் ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தது.
இந்த தாக்குதலால் அச்சம் அடைந்த அந்நாட்டு மக்கள் அருகில் உள்ள அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 17 லட்சத்து 35 ஆயிரம் மக்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா.அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில்,10 லட்சத்து 30 ஆயிரம் பேர் போலந்து சென்றதாகவும், 1,80,000 பேர் ஹங்கேரிக்கும், 1,28,000 பேர் ஸ்லோவாக்கியாவுக்கும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் உக்ரைன் அகதிகளின் வருகை கணிசமாக உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.