இந்திய அரசு மீட்க வேண்டும் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் ஐபிசி தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டி
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் விரைவில் தங்களை மீட்க வேண்டும் என இந்திய அரசுக்கு ஐபிசி தமிழ்நாடு வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் போர புரிந்து வரும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு கல்வி பயில சென்றிருந்த ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கவின் ஐபிசி தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அதில் பேசியுள்ள அவர்,தாங்கள் உக்ரைனில் உள்ள நிக்கோலையா என்ற ஊரில் வீடு எடுத்து தங்கி கல்வி பயின்று வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து கல்லுாரி நிர்வாகம் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கல்லுாரியின் விடுதிக்கு வரச்சொல்லி உத்தரவிட்டதால் விடுதியை நோக்கி கிளம்பி விட்டதாக பேசினார்.
மேலும் அவர்,சபோர்னா என்ற பகுதியில் உக்ரைன் அரசு அங்குள்ள மக்களுக்கு ஆயதங்களை வழங்கியதாகவும் இங்கு ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்த சொல்லி ஆயுதங்களை வழங்கியதாக கூறினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களின் விமான பயண செலவை ஏற்பதாக கூறியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
தங்கள் இருக்கும் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம் மாணவர்களை அருகில் உள்ள ஹங்கேரி எல்லைக்கு செல்லுங்கள் அங்கு உள்ள இந்திய துாதரகம் உங்களை மீட்பார்கள் என்று கூறியதாகவும் பிரத்யேகமாக ஐபிசி தமிழ்நாடுக்கு தெரிவித்துள்ளார்.
You May Like This