Friday, Jul 18, 2025

தாய் நாட்டிற்காக ஆயுதமேந்தினார் முன்னாள் உக்ரைன் அழகி

russiaukrainewar anastasialenna
By Irumporai 3 years ago
Irumporai

Irumporai

in உலகம்
Report

உகரைன் நாட்டில் நடந்து வரும் யுத்தம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, அதே சமயம் உகரைன் மக்கள் பலர் தங்கள் நாட்டினை காக்க ஆயுதமேந்தி போராடிவருகின்றனர். அந்த வகையில் தாயக்கத்தை காக்க ஆயுதமேந்தியுள்ளார் 2015ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் பெற்றவர் அனஸ்டாஸியா லென்னா

தற்போது 31 வயதான இவர் ரஷ்யாவை எதிர்த்துப் போராட துப்பாக்கி ஏந்தியுள்ளார். இவரைப் போலவே உக்ரைன் அதிபர் அழைப்பை ஏற்று ஏற்கனவே ஒற்றைக் காலை இழந்து அதற்காக செயற்கைக் கால் பொருத்தியுள்ள ஒருவரும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையில் இணைந்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெயர் பெற்ற 26 வயதான ஸ்வியாடோஸ்லாவ் யுராஷ் என்பவரும் தனது பங்கிற்கு ஏகே ரக துப்பாக்கியைக் கையில் ஏந்தி போர்க்களம் புகுவதற்கு ஆயத்தமாகி விட்டார். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுசபையின் சிறப்புக்கூட்டம் இன்று இரவு நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.