உக்ரைன் சிறை கைதிகள் விடுதலை ஆனால் ஒரு கண்டிஷன் : உக்ரைன் அதிபர்
உக்ரைன் மீதான ரஷிய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்பு, போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு, சமரச பேச்சுவார்த்தைக்குத்தான் உண்டு.
போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷ்யா இணங்கி வந்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் தாக்குதலில் இது வரை 4,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள சிறைக்கைதிகள், ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட விரும்பினால் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார் மேலும் ,
உக்ரைன் நாட்டை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கவேண்டும் எனவும்உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் உரிமையை வழங்க வேண்டும் என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்