உக்ரைனுக்கு சென்ற அதிபர் ஜோ பைடன்... - கடுப்பில் முக்கிய ஒப்பந்தத்திலிருந்து விலகிய ரஷ்யா..!
நேற்று உக்ரைனுக்கு சென்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கை சந்தித்து பேசியதால் முக்கிய ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் ஜோ பைடன் திடீர் பயணம்
ஒரு வருடமாக உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், நேற்று திடீரென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் நேற்று கியேவில் சந்தித்து பேசினர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றார். கடைசி வரை அவருடைய பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உச்சக்கட்ட கோபத்தில் ரஷ்யா
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் கீவ் நகரில் நடந்து செல்லும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் கீவ் நகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றுள்ள விவகாரம் ரஷ்யாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒப்பந்தத்திலிருந்து விலகிய ரஷ்யா
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உக்ரைன் பயணத்தையடுத்து, அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியுள்ளது.
Start என்னும் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, ரஷ்யா இடையே அணு ஆயுதங்களை குறைக்க வழிவகுக்கிறது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியுள்ளதால் இந்த விவகாரம் உலக மக்களால் உற்று நோக்கப்படுகிறது.