முடிவுக்கு வருகிறாதா உக்ரைன் - ரஷ்யா போர் ? பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
VladimirPutin
RussiaUkraineCrisis
RussiaUkraineWar
By Thahir
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ரஷ்யாவுடன் உக்ரைன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி போர் நடத்த தொடங்கியது. இந்த போரால் உக்ரைன் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது.
இதனிடையே உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்தைகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.