ரஷ்யா போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கும் அமெரிக்கா

RussiaUkraineCrisis RussiaUkraineWar USAprovidingmissiles
By Thahir Feb 27, 2022 11:49 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் தொடர்ந்து 5வது நாளக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியா நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதனிடையே ரஷ்யாவிற்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முதன் முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவுகணைகள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கேட்டுள்ள நிலையில் அமெரிக்கா ஏவுகணைகளை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உக்ரைனுக்கு 3 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், மற்றும் ராணுவ டேங்கிகளை எதிர்க்கும் 200 கையெறி ஏவுகணைகளை வழங்குவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.