உக்ரைன் சோதனைச் சாவடியில் காதலியை கரம் பிடித்த ராணுவ வீரர் - வைரலாகும் வீடியோ
உக்ரைனில் உள்ள சோதனை சாவடியில் ராணுவ வீரர் ஒருவர் காதலியை மோதிரம் மாற்றி திருமணம் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ந் தேதி போர் புரிய தொடங்கியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வந்தனர்.
தலைநகர் கீவ் பகுதியை கைப்பற்ற ரஷ்யா படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர்.ஆனால் உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் அவர்களுக்கு பதிலடி கொடுத்து முன்னேறவிடாமல் தடுத்து வந்தனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் பல்வேறு இடங்களும் நிலைகுலைந்தது.பெரும்பாலான கட்டிடங்கள் சேதம் அடைந்தது.
இதைக்கண்டு அச்சம் அடைந்த அந்நாட்டு மக்கள் அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இதனிடையே உக்ரைனில் உள்ள சோதனைச் சாவடியில் பொதுமக்களை நிறுத்தி ராணுவ வீரர்கள் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் திரும்பி நின்ற போது ராணுவ வீரர் ஒருவர் தன் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரை அழைத்தார். அதைக்கண்ட அந்த பெண் இன்ப அதிர்ச்சி அடைந்து சிரித்தார்.
பின் அந்த ராணுவ வீரர் தனது காதலிக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார். இதை அங்கிருந்த சக ராணுவ வீரர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Watch#Ukraine️ pic.twitter.com/4DeRtEgivM
— Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) March 7, 2022