பிரிய மனமில்லாமல் பிராணிகளுடன் வெளியேறும் உக்ரைன் மக்கள்..!
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அந்நாட்டு மக்கள் தங்கள் வளர்க்கும் பிராணிகளுடன் வெளியேறி வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ம் தேதி போர் புரிய தொடங்கியது.இதனால் உக்ரைனில் வசிக்க கூடிய மக்கள் அச்சத்துடன் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
தங்களின் இருப்பிடங்களில் இருந்து அண்டை நாடுகளுக்கு பல நுாறு கி.மீ நடந்தே செல்லும் அவல நிலை உ்ள்ள போதிலும்,
மக்கள் தங்களின் வளர்ப்பு பிராணிகளை அப்படியே விட்டுவிட்டு செல்லாமல் அவற்றையும் தங்களுடன் அழைத்து செல்வது அவர்களின் உயிரிய மனித நேயத்தை காட்டுகிறது.
பறவைகள், முயல்கள், வெள்ளை எலிகள், பூனைகள் மற்றும் நாய்கள் என அனைத்து வளர்ப்பு பிராணிகளையும் அந்நாட்டு மக்கள் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர்.