எப்போது முடிவுக்கு வருமோ? அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உக்ரைனில் தொடரும் போர் பதற்றதால் உக்ரைனை விட்டு அந்நாட்டு மக்கள் வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒரு நாட்களுக்கு முன்பு 1.5 லட்சம் பேர் போலந்து,ருமேனியா,ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அகதிகள் பிரிவு தகவல் தெரிவித்தது.
போலந்து-உக்ரைன் எல்லையில் 14கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நின்றதாக ஐ.நா. அகதிகள் ஆணையரகத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ் மெய்சர் தெரிவித்தார்.
போலந்து- உக்ரைன் எல்லையை 1 லட்சம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் கடந்து வந்துள்ளதாக போலந்து அரசு கூறி உள்ளது