போரில் 1300 உக்ரைன் வீரர்கள் உயிழந்துள்ளனர் - உக்ரைன் அதிபர் பேட்டி

RussiaUkraineCrisis RussiaUkraineWar 1300Forces ForcesKilled
By Thahir Mar 12, 2022 05:55 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ந் தேதி முதல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் தற்போது வரை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியிலும் விமான தாக்குதல் நீடித்து வருவதால் பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் உக்ரைன் நாட்டு ராணுவத்தினர்,ரஷ்யா படைகளை முன்னேற விடாமல் தடுத்து வருகிறது.

இதனிடையே ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய நாட்களில் இருந்து இதுவரை 1300 வீரர்கள் கொல்லபட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உக்ரைன் தலைநகர் மீது தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை வீசவும், நகரத்தை கைப்பற்ற குடியிருப்புவாசிகளை கொல்லவும் ரஷியா முயற்சி மேற்கொள்ளும்.

அதுவே அவர்களின் இலக்கு என்றால், அவர்கள் வரட்டும். அவர்கள் குண்டுவீச்சை நடத்தி முழு பிராந்தியத்தின் வரலாற்று நினைவகத்தையும், கீவின் கலாச்சார வரலாற்றையும், ஐரோப்பாவின் வரலாற்றையும் அழித்தால், அவர்கள் கீவில் நுழைய முடியும்’ என்றார்.