ரஷ்யாவில் நேரடி ஒளிபரப்பை நிறுத்திய டிக் டாக் செயலி..!

RussiaUkraineCrisis RussiaUkraineWar TikTokStop StopService StopTikTokRussia
By Thahir Mar 06, 2022 11:03 PM GMT
Report

ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்துவதாக டிக் டாக் செயலி நிறுவனம் அறிவித்துள்ளது.

போலி செய்தி வெளியானால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் ரஷ்யா அதிபர் புடின் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

இந்த சட்டம்,இராணுவத்தை பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மேலும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அழைப்பு விடுக்கும் நபர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும். போலி செய்திகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்கும்.

இந்நிலையில் ரஷ்யாவின் புதிய போலி செய்தி சட்டத்தினால் எங்கள் வீடியோ சேவையில் நேரடி ஒளிபரப்பை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என டிக் டாக் செயலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பெரும் சோகத்தையும் தனிமைப்படுத்தலையும்,

எதிர்கொள்ளும் போரின் போது நிவாரணம் மற்றும் மனித தொடர்பை வழங்கக்கூடிய படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு பங்காக இருக்க விரும்புவதாகவும், மேலும் செயலியின் ஊழியர்கள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கூறியுள்ளது.