உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது - கனிமொழி
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு ஒன்றிய அரசுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தரைவழி மார்க்கமாக அவர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கபடும் என கோவில்பட்டியில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ராமர், ஜெயராஜ்,தங்கவேல், கண்ணன் உள்ளிட்ட 4 பேர் பலியான சம்பவத்தில் தமிழக அரசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 3லட்ச நிவாரண உதவியும் அறிவித்தது.
இந்நிலையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி ,அமைச்சர் கீதாஜீவன்,மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியும் தமிழக அரசின் 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி உதவியும் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பட்டாசு தொழிற்சாலையில் தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியே ஆலை இயங்க வேண்டும் அதையும் தமிழக அரசும் கண்காணித்து வருகிறது.
இருந்தபோதிலும் இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது மேலும் ரஷ்யா உக்ரைன் இடையே நடந்துவரும் போர் காரணமாக தமிழக மாணவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.
அவர்களை நேரடியாக மாநில அரசு நேரடியாக மாணவர்களை மீட்க முடியாது இருந்த போதிலும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு பேசி நடவடிக்கை எடுத்து வருகிறது.
போர் நடைபெற்று வருவதால் விமான சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது தரைவழி மார்க்கமாக அவர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கான விமான செலவு தமிழக அரசு ஏற்கும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.
எனவே விரைவில் அவர்களை மீட்டு வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.