கட்டிடங்களில் அடையாளம் போட்டு தாக்கும் ரஷ்யா படைகள் - பீதியில் பொதுமக்கள்
உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று ரஷ்யா - உக்ரைன் இடையே நடத்தப்பட்ட முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனிடையே ரஷ்யா ராக்கெட் வெடிக்குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களிலும் குண்டு மழை பொழிந்து வருவதால் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி பயணம் செய்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் X குறியீடு இடப்பட்டுள்ளது.இந்த குறியீடு ரஷ்யா ராணுவத்தினரால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் இது போன்ற குறியீட்டுகளை பார்த்தால் உடனடியாக அழிக்கவும் என அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளன.