தாக்குதலில் 14,000 ரஷ்யா வீரர்கள் உயிரிழப்பு - உக்ரைன் அதிர்ச்சி தகவல்..!

RussiaUkraineCrisis RussiaUkraineWar RussiaSoldiersKilled
By Thahir Mar 17, 2022 12:34 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா 23-வது நாளாக போர் செய்து வருகிறது.இந்த போரில் 14,000 ரஷ்யா வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் 14,000 ராணுவ வீரர்கள், 82 விமானங்கள், 95 ஹெலிகாப்டர்கள், 404 பீரங்கிகள்,

1,283 ஆயுதம் ஏந்திய வாகனங்கள், 640 வாகனங்கள், 3 போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை ரஷிய படை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.