உக்ரைனின் 4 நகரங்களில் போர் தற்காலிக நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு

RussiaUkraineCrisis StopWar RussiaukraineWar RussiaAnnouncement PeopleDeath
By Thahir Mar 07, 2022 08:56 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ந் தேதி போர் புரிய தொடங்கியது.ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைன் கடும் பாதிப்புள்ளாகியுள்ளது.

தலைநகர் கீவ் நகரை கைப்பற்றிவிட்டால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்துவிடலாம் என்ற எண்ணத்தில் ரஷ்யா கீவ் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது.

உக்ரைனின் 4 நகரங்களில் போர் தற்காலிக நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு | Russia Ukraine Crisis Russia Ukraine War Stop

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த உக்ரைன் நாடு கீவ் நகருக்குள் ரஷ்யா படையினரை முன்னேறவிடாமல் தடுத்தது. இதனால் உக்ரைன் நாட்டின் மற்ற பகுதிகளில் தாக்குதலை ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.

சுமி நகரில் 700-க் கும் அதிகமான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி யுத்த களத்தில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இருதரப்பு நாடுகளையும் இந்தியா கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய 4 நகரங்களிலும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா நேற்று அறிவித்தது.

அந்த நகரில் சிக்கியுள்ள பாதுகாப்பாக வெளியேறவும், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷியா அறிவித்தது. இதனிடையே போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,800க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஐ.நா.தெரிவித்துள்ளது.