உக்ரைன் - ரஷ்யா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

RussiaUkraineCrisis RussiaUkraineWar russiaUkraineTalks
By Thahir Mar 14, 2022 02:11 AM GMT
Report

உக்ரைன் - ரஷ்யா இடையே காணொலி மூலமாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் தாக்குதல் தீவிரமாகி வருகிறது.

இதனையடுத்து நேரில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷிய அதிபர் புதினுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது இஸ்ரேல் பிரதமர் நஃபதலி பென்னெட் இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய, ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என புதின் தெரிவித்துள்ளார். துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உக்ரைன்-ரஷியா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை 10.30 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை காணாலி மூலம் நடைபெறும் என தலைநகர் கீவ்-லிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.