இது என்ன ரஷ்யாவுக்கு வந்த சோதனை..!நடுக்கடலில் நின்ற ரஷ்யா கப்பல் - உதவ மறுத்த ஜார்ஜியா

RussiaUkraineCrisis RussiaUkraineWar RussiaShipStop ToAskHelpGeorgia NotHelpGeorgia
By Thahir Feb 27, 2022 07:09 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா 5 வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.இதனால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ரஷ்யா நாட்டு படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி தனது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டில் குண்டு மழைகளை ரஷ்யா பொழிந்து வருகிறது.உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதையடுத்து பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனிடையே ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று ஜார்ஜியா நாட்டிற்கு வந்துள்ளது.

அப்போது அந்த கப்பல் எரிபொருளின்றி நின்றுள்ளது. எரிபொருள் உதவி கேட்டு கப்பலில் வந்த ஊழியர்கள் ஜார்ஜியா நாட்டின் உதவியை கேட்டுள்ளனர்.

ஆனால் அந்நாட்டு உங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது எனக் கூறியுள்ளது. ரஷ்யா கப்பல் ஊழியர்கள் தாங்கள் புகையில் கப்பலை இயக்கி வருவதாக கூறி உதவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஜார்ஜியா நாட்டு ஊழியர்கள் நீங்கள் துடுப்பு போட்டு ஓட்டிச் செல்லுங்கள் என காட்டமாக பதில் அளித்ததாக செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.