நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் - உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

RussiaUkraineCrisis RussiaUkraine PresidentVolodymyrZelenskyy
By Thahir Feb 26, 2022 08:48 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதனால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி அவர் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்.

நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம் - உக்ரைன் அதிபர் திட்டவட்டம் | Russia Ukraine Crisis President Zelenskyy

நாங்கள் தன்னந்தனியாக போராடி வருவதாகவும் உருக்கமாக தெரிவித்திருந்தார். எந்த நாடும் எங்களுக்கு உதவி செய்யவில்லை,ரஷியாவின் முதல் இலக்கு நான் என்றும்,2-வது இலக்கு எனது குடும்பம் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அதிபர் ஜெலன்ஸ்கி நாங்கள் அனைவரும் கீவ் தலைநகரில் தான் இருக்கிறோம்.

நாங்கள் எங்களது சுதந்திரம்,நாட்டை பாதுகாக்க இங்கு இருக்கிறோம்.இதே வழியில் தொடர்ந்து இங்கேயே இருப்போம் என்றார்.

மேலும்,இன்று இரவு ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை தொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும்,நாட்டின் பல நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ராணுவத்தை சரண் அடைய நான் கூறியதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.நான் அவ்வாறு கூறவில்லை.

நாட்டை விட்டுக் கொடுக்கப் போவதில்லை.நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம்.எங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக போராடுவதாகவும் கூறினார்.