உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்த பெலாரஸ் நாட்டு ராணுவத்தினர் - தப்பிக்குமா உக்ரைன் நாடு?
உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ந்து ரஷ்யா நாட்டு படைகள் 120 மணி நேரத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யதா இடைவெளியின்றி தாக்குதல் நடத்தி வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மிக ஆபத்தான சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆப்ரேசன் கங்கா மூலம் ஒன்றிய அமைச்சர்கள் 4 பேர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாணவர்களை மீட்கும் பணியில் தீவிர முயற்சி எடுத்த வருகிறது.
பெலாரஸ் நாட்டின் ராணுவ வீரர்களும் உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாட்டு படைகள் உக்ரைனின் வடக்கு பகுதியில் நுழைந்து விட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை தொடர்ந்து பெலாரஸ் நாடும் தாக்குதல் நடத்த உள்ளதால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.