உக்ரைனில் இருந்து சாரை சாரையாக வெளியேறும் மக்கள் - அதிகரிக்கும் பதற்றம்
உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் வசிக்க கூடிய மக்கள் தங்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

போர் பீதியால் உக்ரைன் நாட்டில் இருந்து பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா சபையின் அகதிகளுக்கான பிரிவு கூறியுள்ளது.
மேலும் உக்ரைனில் இருந்து வெளியோர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

உக்ரைனில் இருந்து வெளியேறுவோர் போலந்து,ஹங்கேரி,ஸ்லோவாக்கியா,ருமேனியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
போலந்து நாட்டு எல்லையில் மட்டும் 2,81,000 பேர் குவிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.