உக்ரைனில் ரெயிலில் பயணிக்க இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைனில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 7வது நாளாக தனது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் போர் நடந்து வரும் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரெயில்களில் இந்தியர்களும்,
பிற வெளிநாட்டினரும் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக மாணவர் ஆன்ஷ் பண்டிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவர் இந்தியர்களையோ,பிற வெளிநாட்டினரையோ ரெயிலில் ஏற ரெயில்வே காவலர்கள் அனுமதிக்கவில்லை.
இங்குள்ள ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகளவில் உள்ளது.அதிகமான இந்தியர்கள் அதிகளவில் காத்திருக்கின்றனர்.
என்ன நடக்குமோ என்று எல்லோரும் பயப்படுகிற நிலையில் நாங்கள் நமது கொடியுடன் இங்கே இருக்கிறோம் என கூறியுள்ளார்.
மேலும் அவர் எங்களை விரைவாக இந்திய துாதரகம் வெளியேற்றும் என்று நம்புவதாக கூறினார்.
இந்திய துாதரகம் நாங்கள் விரைவாக வெளியேற உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.