'' உக்ரைனுக்கு உதவ நான் வாரேன் '' : ஆதரவு கொடுத்த தமிழருக்கு பதில் கொடுத்த உக்ரைன் அதிபர்
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ட்விட்டரில் உக்ரைன் அதிபருக்கு உதவதான் முன் வருவதாக கூறியதற்கு பதிலளித்துள்ள அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்ற இளைஞர் சர்வதேச கராத்தேயில் பல பதக்கங்களை வாங்கி உள்ளார்.
இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் உங்களுக்கு உதவுவதற்கு நான் வருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்

அதற்க்கு அவர் உங்களுக்கு பாஸ்போர்ட் இருக்கிறதா என்று பதில் ட்விட் செய்துள்ளார். என்னுடைய கருத்து நம்முடைய தமிழ் மக்கள் அங்கு பாதிபடைந்து வருகின்றனர்
அவர்களுக்காக நான் உதவ வேண்டும்,உக்ரைனில் போர் தொடந்து நடைபெற்றால் இங்கு பெட்ரோல் டீசலின் விலை உயரும். மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தி உக்ரேனில் படிக்கும் மாணவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி ஒருவராக என்னால் உக்ரைனுக்கு உதவ முடியும் இத்தாலியில் இருந்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் நம் நாட்டிற்க்கு உதவ முன்வந்தார்.
அதேபோல் அவர் வழியில் நானும் உக்ரைனுக்கு உதவ சென்றால் என்னை பார்த்து ஏராளமான இளைஞர்கள் வருவார்கள் என கூறியுள்ளார்.