போருக்கு மத்தியில் உக்ரைன் பெண்ணை திருமணம் செய்த இந்திய இளைஞர்

LoveMarriage RussiaUkraineCrisis RussiaUkraineWar LoveCouples
By Thahir Mar 02, 2022 01:37 AM GMT
Report

உக்ரைன் நாட்டு பெண்ணை போருக்கு மத்தியில் ஐதராபாத்தைச் சேர்ந்த நபர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 7வது நாளாக தனது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டில் இருந்து மக்கள் அச்சத்துடன் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர்.

போருக்கு மத்தியில் உக்ரைன் பெண்ணை திருமணம் செய்த இந்திய இளைஞர் | Russia Ukraine Crisis Love Couples Marriage

உக்ரைன் மீது ரஷ்யா தனது ஏவுகணை தாக்குதலை தொடுத்து வருவதால் அந்நாட்டில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் சின்னாபின்னமாகியுள்ளன.

இந்நிலையில் உக்ரைனை சேர்ந்த பெண்ணை ஐதராபாத்தைச் சேர்ந்தவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பிரதீக்.இவர் உக்ரைனில் பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே உக்ரைன் சேர்ந்தவர் லுபோவ்.இவர்கள் 2 பேரும் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்துள்ள நிலையில் காதல் மலர்ந்துள்ளது.

போருக்கு மத்தியில் உக்ரைன் பெண்ணை திருமணம் செய்த இந்திய இளைஞர் | Russia Ukraine Crisis Love Couples Marriage

இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் பிப்ரவரி 23ல் உக்ரைனில் திருமணம் செய்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவர் 24ல் போர் துவங்கிய நிலையில் பிரதீக்,லுபோவ் தம்பதி வரவேற்பு நிகழ்ச்சிக்காக முந்தைய நாளே இந்தியா வந்துள்ளனர்.

இந்தியா வந்த காதல் தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. போருக்கு மத்தியில் காதல் தம்பதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி அனைவரது ஆசிர்வாதங்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.