உக்ரைனில் இரயில்களில் ஏற இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு - வெளியான அதிர்ச்சி வீடியோ
உக்ரைனில் ரயிலில் ஏற முயன்ற இந்திய மாணவர்களை அனுமதிக்க மறுக்கும் பாதுகாப்பு படையினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் தொடரந்து நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்பதால் இந்திய மாணவர்கள் அந்நாட்டு எல்லை நடந்து சென்றாவது கடந்து விடுங்கள் என இந்திய துாதரகம் அறிவுறுத்தியிறுந்தது.

இதையடுத்து அங்குள்ள இந்திய மாணவர்கள் கார்கிவ் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற போது பாதுகாப்பு படையினர் அவர்களை ரயிலில் ஏற அனுமதிக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் திருச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தங்களை உக்ரைன் நாட்டு மக்கள் ரயிலில் ஏற அனுமதிக்க வில்லை அப்படி ஏறினாலும் தங்களை மிதித்து தள்ளுவதாக வேதனையுடன் தெரிவித்தார்.
உணவுகளின்றி இந்திய மாணவர்கள் தவிப்பதாகவும் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
காதை பிளக்கும் வெடிகுண்டு சத்தத்திற்கு நடுவே நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் தங்களுக்கு இந்திய துாதரகம் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று இந்திய துாதரக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You May Like This