உக்ரைன் தாக்குதலில் இந்திய மாணவர் காயம்?
உக்ரைனின் லிவிவ் நகர் அருகே துப்பாக்கிசூட்டில் ஹர்ஜோத் சிங் என்ற இந்திய மாணவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 9-வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலால் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதி நிலைகுலைந்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள இந்திய மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். எப்படியாவது நடந்து சென்றாவது அந்நாட்டு எல்லையை கடந்து விடுங்கள் என அங்குள்ள இந்திய மாணவர்களுக்கு இந்திய துாதரகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அங்கு நடந்த தாக்குதலில் உயிரிழந்தார். இந்நிலையில் உக்ரைன் லிவிவ் நகர் அருகே துப்பாக்கிச்சூட்டில் ஹர்ஜோத் சிங் என்ற இந்திய மாணவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிவிவ் நகரத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தன்னை தாயகம் அழைத்துச் செல்ல ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது என மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.