இந்திய மாணவர்கள் பிணை கைதிகளாக உக்ரைன் பிடிக்கவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பிணை கைதிகளாக பிடித்து வைக்கவில்லை என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் வெளியேறும்படி இந்திய துாதரகம் உத்தரவிட்டிருந்து. உக்ரைன் தலைவர் கார்கிவ் பகுதியில் உள்ள இந்தியர்கள் பெசோசின்,பபாயி,பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய துாதரகம் கேட்டுக்கொண்டது.

இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெறும் சிரமத்தை சந்தித்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே இந்திய மாணவர்களை உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவலை ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த தகவலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கார்கிவ் பகுதியிலிருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாகவும் அங்கு யாரையும் பிணை கைதிகளாக பிடித்து வைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.