உக்ரைன் எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் - இந்திய துாதரகம் அறிவுறுத்தல்
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் எல்லை பகுதிக்குச் செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த வியாழக்கிழமை போர் தொடுக்க அதிபர் புடின் உத்தரவிட்டார்.
இதையடுத்து ரஷ்யா படைகள் உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்ந தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
ரஷ்யாவின் இந்த தொடர் தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது.இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

உக்ரைனின் அருகில் உள்ள நாடுகளான ருமேனியா,ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் வழியாக இந்தியர்களை மீட்க முயற்சிகளை ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முன்னறிவிப்பின்றி இந்தியர்கள் உக்ரைன் நாட்டு எல்லை பகுதிக்குச் செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,உக்ரைனின் கிழக்குப்பகுதியில் உள்ள இந்தியர்கள் வீட்டிலே இருக்குமாறு உக்ரைனின் இந்திய துாதரகம் அறிவுறுத்தியுள்ளது.
