தங்கம் விலை கிடு கிடு உயர்வு - வரலாறு காணாத உச்சம்

GoldPrice RussiaUkraineCrisis RussiaUkraineWar GoldPriceHigh
By Thahir Mar 02, 2022 05:41 AM GMT
Report

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.77 உயர்ந்து ரூ.4,875 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

தங்கம் விலை கிடு கிடு உயர்வு - வரலாறு காணாத உச்சம் | Russia Ukraine Crisis Gold Price High Chennai

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.616 உயர்ந்து ரூ.39,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் ஒரு கிராம் தங்கம் ரூ.77 உயர்ந்து ரூ.4,875 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.