ஐரோப்பிய யூனியனில் இணைந்த உக்ரைன் - ரஷ்யாவின் கதி என்ன?

RussiaUkraineCrisis RussiaUkraineWar EuropeanParliament AcceptUkraineApplication
By Thahir Mar 02, 2022 01:58 AM GMT
Report

ஐரோப்பிய யூனியனில் இணைய உக்ரைன் விண்ணப்பித்திருந்த நிலையில் விண்ணப்பம் ஏற்க்கப்பட்டுள்ளது.

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.

இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனில் இணைந்த உக்ரைன் - ரஷ்யாவின் கதி என்ன? | Russia Ukraine Crisis European Parliament Accepted

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமை அன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்.

இதையடுத்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசிய அவர்,உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக கூறினார்.

நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள்,நீங்கள் எங்களை கைவிடமாட்டீர் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

அவரின் உரை முடிந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக உக்ரைனின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் சேரக்கூடாது என்பதற்காக தனது போரை தீவிரபடுத்தி வரும் ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

You May Like This