தைரியமாக இருங்கள் உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடல்
உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் கல்வி பயில உக்ரைன் நாட்டுக்கு சென்ற தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்த பல்வேறு மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநில மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினர்.
இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அண்டை நாடுகள் வழியாக மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினார்.
மாணவர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தைரியமாக இருங்கள் உங்களை மீட்டு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.