உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 148 குழந்தைகள் பலி - வெளியான பகீர் தகவல்..!

Death Russia Ukraine Child RussiaUkraineWar
By Thahir Mar 31, 2022 10:44 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா 37-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் 148 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் 1,370 ஏவுகணைகளை வீசியதுடன்,15 விமான நிலையங்களை அழித்துள்ளதாகவும் கீவ் தெரிவித்துள்ளது.

10 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புடின் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது போல் தெரிகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது என்றார். அவர் சில உயர் ஆலோசகர்களை பணி நீக்கம் செய்துள்ளார் அல்லது வீட்டுக் காவலில் வைத்துள்ளார் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன என அவர் கூறியுள்ளார்.