கனடா நாட்டின் வழியாக ரஷ்யா நாட்டு விமானங்கள் பறக்க தடை
கனடா நாட்டின் வான் வழியாக ரஷ்யா நாட்டு விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு ராணுவ படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா முனைப்பு காட்டி கீவ்வின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா படை தொடர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே இரு நாட்டு படைகளுக்கும் இடையே நடைபெறும் இந்த தாக்குதலில் பெரும்பாலனோர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமைதி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்தும் மறுத்து வந்த உக்ரைன் அரசு பிறகு பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
ரஷ்யா நாட்டின் மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளன.குறிப்பாக ரஷ்யா நாட்டு விமானங்கள் வான்வெளியில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம்,டென்மார்க்,அயர்லாந்து,இத்தாலி,ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டின் வான்வெளியில் ரஷ்யா நாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கனடாவும் தங்கள் நாட்டின் வான்வெளியில் ரஷ்யா நாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.