ரஷ்யாவுக்குள் நுழைய போரிஸ் ஜான்சனுக்கு தடை - ரஷ்யா அதிரடி..!
ரஷ்யா நாட்டிற்குள் நுழைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தியது.இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.
பிரிட்டன் அரசும் தனது கண்டனங்களை வலுவாக தெரிவித்தது.மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டார்.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய தாக்குதலில் ஏராளாமான மக்கள் மற்றும் இருநாட்டு வீரர்களும் உயிரிழந்தனர்.
தொடர் தாக்குதலால் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறினர். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியும்,நிதியுதவி அளித்தும் உதவி செய்து வருகின்றனர்.
இதனிடையே உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன் செய்து வருவதால்,ரஷ்யாவுக்குள் நுழைய போரிஸ் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.