நேட்டோ மூலம் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் - வெளியான திடுக்கிடும் தகவல்..!
உக்ரைன் மீது ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் நேட்டோ அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதமாக தனது உக்கிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைன் நாடு நிலைகுழைந்துள்ளது.ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
அந்நாட்டு மக்கள் பலரும் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்று விட்டனர். பல்வேறு உலக நாடுகளும் போருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ரஷ்யா தனது நிலைபாட்டில் இருந்து பின்வாங்காமல் இருந்து வருகிறது.

இதனிடையே உக்ரைன் மீதான போரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
மேலும் புதின் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் நாங்கள் பதிலளிப்போம். பதிலின் தன்மை ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவதின் தன்மையைப் பொறுத்தது" என்று பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஜோ பைடன் கூறினார்.
அமெரிக்கா பதிலளிக்கும் என்று தெரிவித்துள்ளதால் நேட்டோ படைகள் மூலம் அமெரிக்கா மறைமுக தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதா என்று சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.