இந்திய மாணவர் நவீன் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் - ரஷ்ய தூதரகம் அறிவிப்பு
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா இன்றுடன் 7-வது நாளாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனிடையே நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் தாம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க மூலக்காரணம் என்று கூறப்படுகிறது.
இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் பலத்த சண்டை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் நேற்று நடந்த தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை உக்ரைனின் கார்கீவ் பகுதியில் உள்ள அரசு கட்டடங்களை குறி வைத்து ரஷ்யா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.
அப்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் சென்றபோது, ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் எம்.பி.பி.எஸ் படித்து வந்த 21 வயதான மாணவர் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாணவரின் பெற்றோர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தது குறித்து விரிவான் விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.