இன்ஸ்டாகிராமுக்கு பதிலாக அறிமாகமாகும் புதிய செயலி - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்
ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு பயனாளர்கள் தங்களுடைய அதிருப்த்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதனிடையே பேஸ்புக்,ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமுக்கும் ரஷ்யாவில் தடை செய்யப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்த தடை அமலுக்கு வந்துள்ள நிலையில் அந்நாட்டு பயனாளர்கள் செய்தவறியாது தங்களுடைய மனக்குமுறல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்ய தொழில்நுட்ப தொழில்முனைவோர் உள்நாட்டு சந்தையில் மார்ச் 28 ஆம் தேதியன்று இன்ஸ்டாகிராமிற்கு பதிலாக கூடுதல் செயல்பாடுகளை கொண்ட 'ரோஸ்கிராம்' என்ற செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது இன்ஸகிராமுக்கு மாற்றாக அமையுமா என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.