உக்ரைன் மீது படை எடுக்க போகிறாரா புதின்?

vladimirputin wartension ukrainerussiaconflict russianforcesnearukraine volodymyrzelensky
By Swetha Subash Feb 15, 2022 01:15 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

உக்ரைன் மீது நாளை ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஜெலன்ஸ்கி தமது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்ளை ரஷ்யா எல்லையில் குவித்து வருவதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

உக்ரைன் அதிபரின் முகநுால் கருத்து குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில்,

உக்ரைன் மீது நாளை படையெடுப்பு செய்ய புதின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதில்லை நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளது.

இருந்தாலும் எந்த முன்னறிவிப்பும் இன்றி தாக்குதல் தொடுக்க கூடிய நிலையில் புதின் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.