குழந்தைகளுக்கு கொரோனா சொட்டு மருந்தை பரிசோதிக்கும் ரஷ்யா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே சமயம் கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் பெரும்பாலானவை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
ஃபைசர் போன்ற ஒரு சில தடுப்பூசிகள் மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் பரிசோதனையும் விரைந்து நடைபெற்று வருகிறது.
ரஷ்யா 8 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழியாக தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் தற்போது வரை எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என ரஷ்யாவில் கமேலியா இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது. இந்த சொட்டு மருந்து செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.