ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் ரஷ்யா இடைநீக்கம் - அதிர்ச்சியில் அதிபர் புதின்
ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.
தொடர்ந்து 3வது நாளாக நடைபெறும் இந்த வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலால் இருநாட்டு பாதுகாப்பு வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீதான இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஐரோப்பிய யூனியன் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தொடங்கப்பட்டு மனித உரிமைகள், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.