பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் உள்ள பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு
மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் சுமார் 1,000 மாணவர்கள் படிக்கும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென புகுந்த அப்பள்ளியின் முன்னாள் மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செக்யூரிட்டி, 2 ஆசியரியர்கள், 7 குழந்தைகள், 6 பெரியவர்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து பள்ளியில் இருந்து குழந்தைகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் அலறி அடித்து ஓடினர்.

பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் மாணவன் ஆர்டெம் கசான்ட்சேவ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து செப்டம்பர் 29 வரை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இத்தாக்குதலுக்கு அதிபரின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஆழ்ந்த இரங்லை தெரிவித்துள்ளார்.
பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.