உயிருக்கு போராடிய நபரை காப்பாற்ற சென்ற அமைச்சர் மரணம்
ரஷ்யாவில் கமெரா மேனை காப்பாற்ற சென்ற அமைச்சர் மரணமடைந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்ய நாட்டின் அவசரகால அமைச்சர் எவ்ஹெனி ஜினிசேவ். இவரது தலைமையில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள நகரான நாரில்ஸ்கில் துறை ரீதியான பயிற்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இதில் 6000 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியைப் பல்வேறு ஊடகங்களும் செய்தியாக்கி வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் இந்த பயிற்சிப் பட்டறை குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்த கேமரா மேன் ஒருவர் ஜினிசேவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த கேமரா மேன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்தார்.
அவரைக் காப்பாற்ற முயற்சித்து மலை உச்சியிலிருந்து தண்ணீரில் குதித்த ரஷ்ய அமைச்சர் மரணமடைந்தார்.
இந்நிலையில் ரஷ்ய அமைச்சர் குதித்த போது பாறை ஒன்றில் தலை மோதியதில் உயிரிழந்துவிட்டதாக ரஷ்யா டைம்ஸ் பத்திரிக்கையின் தலைமை செய்தி ஆசிரியர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.