ராக்கெட்டில் இந்திய கொடியை மறைக்காத ரஷ்யா - இணையத்தில் வைரலாகும் வீடியோ
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
இந்நிலையில், 3-வது முறையாக கீவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கீவ் நகரில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.
அப்பாவி பொதுமக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ராக்கெட்டில் ஒட்டப்பட்டுள்ள மற்ற நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் கொடிகளை மறைத்து இந்தியாவின் கொடியை மட்டும் மறைக்காமல் ரஷ்யா விட்டுள்ளது.
இதற்கான காரணம், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல தடைகளை விதித்துள்ளது. அதனால், அந்நாடுகளின் கொடிகள் மறைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா ராணுவம் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.