நாங்க நினைச்சா 5 நிமிடத்தில் லண்டன் காலி - பீதியை கிளப்பும் ரஷ்யாவின் அடுத்த வீடியோ
மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ரஷ்யா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இப்போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் நிலையில் உக்ரைனுக்கு ஆயுதம் தந்து உதவும் நாடுகள் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும், எங்களை பாதுகாத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் நினைவூட்டும் வண்ணம் அவ்வப்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்களை ரஷ்யா வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் மணிக்கு 7000 மைல் வேகத்தில் செல்லும் வேகத்தில் சென்று எதிரி படைகளை தாக்கும் சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் காட்சிகளை ரஷ்யா வெளியிட்டுள்ளது. இதனை செலுத்தினால் 5 நிமிடத்தில் லண்டன் நகரமே காலியாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Russia releases footage of 7,000mph hypersonic nuke missile that could hit London in five minutes pic.twitter.com/fI2HD6GUHG
— The Sun (@TheSun) March 14, 2022