உக்ரைன் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம் : வெளியான அதிர்ச்சி தகவல்

Ukraine Russian Federation
By Irumporai Mar 04, 2023 03:44 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 1 ஆண்டுகள் முடிவடைந்த  நிலையில், உக்ரைன் மீது தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்த புதின் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .

உக்ரைன் ரஷ்யா போர்

கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் நாட்டின் மீது புதின் உத்தரவுப்படி ரஷ்ய ராணுவம் போரிட்டது. இதற்கு ஆரம்பத்தில் உக்ரைன் நாடு பதறினாலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்உக்ரைனுக்கு ஆதரவாக அணு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி கொடுத்து வந்தன.

உக்ரைன் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம் : வெளியான அதிர்ச்சி தகவல் | Russia Plans Suicide Attack On Ukraine

தற்கொலை படை தாக்குதல்

இந்த நிலையில் , இதுவரை இரு நாட்டு தரப்பிலும், பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷியாவிடமிருந்து அதை மீட்கவும் உக்ரைன் போராடி வருகிறது.

இவ்வாறு பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் உக்ரைனில் மிகப்பெரியளவில் தற்கொலைப் படைத்தாக்குதலை ரஷ்யா நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதற்கான உத்தரவை அதிபர் புதின் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது, இந்த தகவல் சரவ்தேச அளவில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது