49 பேருடன் சென்ற ரஷ்யா விமானம் விபத்து - அனைவரும் உயிரிழப்பு?
49 பேருடன் சென்ற ரஷ்யா விமானம் விபத்தை சந்தித்துள்ளது.
ரஷ்யா விமானம் விபத்து
அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் An-24 விமானம் பயணிகள் ஊழியர்கள் உட்பட 49 பேருடன் சீன எல்லையோர டிண்டா நகரை நோக்கி பறந்து கொண்டிருந்தது.
டிண்டா நகரை நெருங்கும் போது, ரேடார் கண்காணிப்பில் இருந்து விலகி, விமானத்துடனான தொடர்பை ரஷ்ய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இழந்ததாக கூறப்படுகிறது.
5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 49 பேர் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.
மீட்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டத்தில், திண்டாவில் இருந்து 15கிமீ தொலைவில் விமானம் கீழே விழுந்து, தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
மீட்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என அச்சம் எழுந்துள்ளது.